உலகில் அதிக உயரமான பெண்ணாக கருதப்பட்ட யாஓ டெபென் தனது 40 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் கிழக்கு பிராந்தியமான ஷுசெங் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இவர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு பிறந்த யாஓ டெபேன், 7அடி 8 அங்குல உயரமுடையவராக காணப்பட்டதால் இவர் உலகிலே அதிக உயரமுடைய பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
இவரது அசுரவேக வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்டிருந்த கட்டியே காரணமாக அமைந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையினூடாக குறித்த கட்டி இவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது.
ஆனாலும் அதே வருடத்தில் மீண்டும் அந்த கட்டியானது வளர்ச்சிடையந்ததுடன் அவரது குடும்ப நிலைக்காரணமாக அவர் மீளவும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை.
இந்நிலையிலே இவர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

