புதுக்குடியிருப்பில் டெலிகொம் பரிவர்த்தன நிலையம் திறந்துவைப்பு

ஸ்ரீ லங்கா டெலிக்கொம் பரிவர்த்தன நிலையம் ஒன்று மட்டக்களப்புப் புதுக்குடியிருப்பில் 02.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா டெலிக்கொம்மின் பிராந்திய முகாமையாளர் Y.கோபிநாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொலைத்தொடர்புகள் பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் , கிழக்கு மாகாண சபை உறுப்பிரர் சுபைர் ஆகியோருடன் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு வே.தட்சணாமூர்த்தி மற்றும் ஆலய பரிபாலன சபையினரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய முகாமையாளர்..இதன்மூலம் களுவாஞ்சிக்குடிக்குட்பட்ட பிரதேச மக்கள் இதன் மூலம் டெலிக்கொம் இன் அனைத்துச் சேவைகளையும் துல்லியமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.














தகவல்: சி.சுதேஸ்வரன்
படங்கள் :வீ.லிங்கநாயகம் (சுரேஸ்)