இன்று மாலை 3.30 மணியளவில் புதுக்குடியிருப்பிலிருந்து சிறாம்பியடிக்குச் சென்ற முச்சக்கர வண்டியுடன் களுவாஞ்சிக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சோமசுந்தரம் ராஜ் என்பவரின் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளில் வந்த களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த நபருக்கு சிறிய உராய்வுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
(படங்கள் மற்றும் தகவல். ரா.லோகிதராஜ்)
(படங்கள் மற்றும் தகவல். ரா.லோகிதராஜ்)





