மட்டக்களப்பு வாவியில் பாம்பையொத்த நீர்வாழ் உயிரினங்கள்

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் நேற்று மாலை முதல் பெருந்தொகையான பாம்புகளை ஒத்த நீர் வாழ் உயிரினங்கள் படையெடுப்பு . இன்றும் அதே நிலை முன்னரும் சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஏற்பட்டதால் இம்முறையும் ஏதோ அனர்த்தம் ஏற்படலாம் என மக்கள் பதற்றத்தில். எனினும் இவை அனைத்தும் மார்கழி மாதத்திலேயே நடைபெறுவதால் வழமையாக மார்கழி மாதத்தில் அந்தக் கடல்வாழ் உயிரினம் இடம்பெயர்வது வழக்கம் என்றாகி விட்டது என பீதியடையாமல் இருக்கின்றவர்களும் உள்ளனர்.