மட்டக்களப்பிலும் நுரைச்சோலை,காத்தான்குடி கழிவுகளை கொட்டுவதற்கு தாளங்குடாவில் நில அபகரிப்பு?



மட்டக்களப்பு தாளங்குடாவில்சுமார் 3-5 ஏக்கர் மரமுந்திரிகை காணிகளில் காத்தான்குடிகழிவுப் பொருட்களை பாவித்து மின்சாரம் தயாரித்தல் என்ற போர்வையில் மரமுந்திரி செய்கை காணி அபகரிக்கப்படுகின்றது. இதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நடவடிக்கையினால் சுற்றுப்புறச் சூழலுக்கு பேராபத்து ஏற்படலாம்

1. அதிகளவான காபனீரொட்சைட்டு வெளியேறி சூழலை மாசுபடுத்தும்
2 குடிநீர் கிணறுகள் மாசுபடும்
3. மேலதிக கழிவகற்றலினால் சூழல் மாசுபடும்
4. மேலதிக கழிவுகளை கடலில் கொட்டவேண்டி வரலாம் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்படையலாம்
5. தொற்று நோய்கள் ஏற்படலாம்
இவற்றையெல்லாம் அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதி அமைச்சரும் மாகாணசபை உறுப்பினர்களும் சனாதிபதியின் ஆலோசகரும் சரியென ஏற்றுக் கொள்வார்களா? அல்லது வாய்மூடி மௌனிகளாக இருப்பார்களா? எனதாழங்குடா ,புதுக்குடியிருப்பு ,கிரான்குளம் ,ஆரையம்பதி மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
-நன்றி www.supeedsam.com