பேஸ்புக் மெசேஞ்சரில் SMS அனுப்பலாம்

பேஸ்புக் மெசஞ்சரில் எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அன்ட்ரொய்ட் மெசேஞ்சர் அப்ளிகேசனை அப்டேட் செய்வதன் மூலம் இந்த புதிய தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாமலும் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இந்த புதிய பேஸ்புக் மெசேஞ்சர் அப்ளிகேசன் வசதியானது இந்தோனேசியா, வெனிசுலா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏனைய நாடுகளிலும் அதனை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் பல முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.