மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின நிகழ்வு



மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தாpன் 150வது பிறந்ததினத் முன்னிட்டு 2013.01.19 ஆம் திகதி சனிக்கிழமை 2.00 மணிக்கு அக் கல்லூரியில் இலவச கணனிக் கல்வியினை பூர்த்திசெய்த மாணவா;களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வூம், விசேட தேவையூடையோருக்கான முச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யூம் நிகழ்வூம், தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த யூவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வூம் இடம்பெற்றது.
சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் திரு.எஸ்.திருநாவூக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கபாலீசானந்தாஜீ மகராஜ் அவர்களும், ஸ்ரீமத் சுவாமி சதுர்பூஜானந்தாஜீ மகராஜ் அவர்களும், பல அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும், பயனாளிகளும், திலகவதியார் மகளிர் இல்லக் குழந்தைகளும் கலந்து சிறப்பித்தனர்.
சுவாமி விவேகானந்தர் பெரிதும் விரும்பியவாறு அவரின் இப் பிறந்ததின நிகழ்வில் 16 விசேட தேவையூடையோருக்கான முச்சக்கரவண்டிகளும், 3 தள்ளுவண்டிகளும், வழங்கப்பட்டன. இவற்றுக்கான உதவியினை வெளிநாடு, உள்நாட்டில் வசிக்கும் தர்ம உள்ளங்கள் வழங்கி வைத்தனர். அதில் இலண்டன் அகிலண் பவூண்டேசன் ஸ்தாபகர் மு.கோபாலகிருணஸ்ணன் அவர்களினால், 2012.12.28 ஆந்திகதி வழங்கப்பட்ட விசேட தேவைடையோருக்கான முச்சக்கர வண்டிகளின் மிகுதி முச்சக்கர வண்டிகளும், தையல் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த யூவதிகளுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. தையல் இயந்திரங்களை அவூஸ்திரேலிய அன்பாலயம் என்ற அமைப்பு வழங்கி வைத்தது, அத்தோடு இலவச கணனிக் கல்வியினை பூர்த்திசெய்த 61 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்தோடு தொடர்ந்து 5 நாட்களும் கல்லூரி முன்பாக ஆன்மீக புத்தகக் கண்காட்சியூம் விற்பனையூம் நடைபெற்றக்கொண்டிருக்கிறது.
சமூக நலன்புரி அமைப்பு இரண்டு மகளிரி இல்லங்களினையூம், அத்தோடு இவ்வாறு தொழில்நுட்பக் கல்லூரி, தையல் பயிற்சி  மற்றும் எமது சமூகத்திற்கு தேவையான காலத்திற்கேற்ற தேவைகளை உணர்ந்து இவ்வாறு பல்வேறு மனிதநேயப் பணிகளினை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





























Thanks   to Battinews