இன்று 17.01.2013 வியாழக்கிழமை மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் 2013 இற்கான தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திரு.வே.தட்சணாமூர்த்தி அதிபர் அவர்களின் தலைமையில் பாடசாலை நிர்வாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதன் போது பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோர்களும், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர். இதன் போது அதிபர் ஆசிரியர்களின் கல்வி சம்பந்தமான வழிகாட்டல் உரைகளும் வித்தியாலய மாணவர்களின் பல்வகையான கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்றன.
புதிய மாணவர்களை வரவேற்பதற்காக காத்திருக்கும் மாணவர்கள்..
ஆயத்தமாகும் புதிய மாணவர்கள்..
புதிய மாணவர்களை வரவேற்றல்...
மங்கள விளக்கேற்றல்...
இறை வணக்கம்
கலை நிகழ்வுகள்..
| கிரான்குளம் மக்கள் வங்கி கிளையில் புதிய கணக்குகளை ஆரம்பித்த மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டபோது... |
| அதிபர், பிரதி அதிபர்களின் உரை.. |
| அதிபர், பிரதி அதிபர்களின் உரை.. |
| கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுடன் புதிய மாணவர்கள்..
Photograph by : R.Logitharaj
|