கிரான்குளம் பிரதேசத்தில் பொலிசாரால் ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரதேசத்தில் காட்டுப்பகுதியொன்றிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில வற்றை பொலிசார் 26.1.2013 மாலை மீட்டெடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் புலானாய்வு அதிகாரி எம்.தாஹாவுக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் கிரான்குளம் பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.
ஒரு மிதிவெடியும், இரண்டு குண்டுகளும் இதன்போது மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.









Thanks to Kattankudyinfo