காத்தான் குடியில் கலாசாரக்கண்காட்சி

 இலங்கை முஸ்லிம்களின் தொன்மை, வரலாறு ,பாரம்பரியம் பண்டைய அரும்பொருட்கள் என்பவற்றை ஒன்று திரட்டி காத்தான்குடி பிரதேச செயலகம் நடத்தும் கலாசாரக் கண்காட்சி எதிர்வரும் 2013 பெப்ரவரி மாதம் 1ம் 2ம் 3ம் திகதிகளில் கலாசாரக் கண்காட்சி ஒன்று பிரதேசசெயல ககலாசார பிரிவினால் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
         இக் கண்காட்சியில் வரலாற்றுப்பழைமைவாய்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுபாவனைப்பொருட்கள்,  நாணயங்கள்,  கல்வெட்டுக்கள், பாரம்பரியவிவசாயம், மீன்பிடிகைத்தொழில்கள், மருத்துவம், சடங்குகள், தொடர்பாடல் முதலியகருவிகள் , உபகரணங்கள், வாழ்வியலை புலப்படுத்தும் அம்சங்கள் என்பன  காட்சிப்படுத்தப்படவுள்ளன.