03.01.2013 இன் மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலயத்தில் கிழக்கிலங்கை சிற்றிதழாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு

03.01.2013 இன் மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலயத்தில் கிழக்கிலங்கை சிற்றிதழாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்  கிழக்கிலங்கையில் இருந்துவெளிவரும் சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், துணையாசிரியர்ளும் மற்றும் சிற்றிதழ்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
    இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்துதற்போது பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற போதும் வாசிப்புத்திறன் பெரிதும் பின்தங்கியுள்ளது இதற்குக் காரணம் சிற்றிதழ்களின் முறையான சந்தைப் படுத்தல் இன்மையே ஆகும். இவ் ஒன்றியத்தின் மூலம் அந்தப் பிரச்சினை ஓரளவேனும் நிவர்த்தியாக்கப் படலாம் என நிகழ்வில் கலந்து கொண்டோர் கருது்துக் கூறினர்.
செங்கதிர் சஞ்சிகையின் சார்பில் அதன் ஆசிரியர் செங்கதிரோன் திருகோபாலகிருஸ்ணன் அவர்கள் மங்கல விளக்கேனற்றும் காட்சி



மகுடம் சார்பில் திரு மணிசேகரம் அவர்கள்
மணிப்புறா" சார்பில் அதன் ஆசிரியர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அவர்கள்
 
தென்றல் சஞ்சிகை சார்பில் அதன் ஆசிரியர் திரு.கிருபாகரன் அவர்கள்

கதிரவன்,கவிஞன் சார்பில் அதன் குழும உறுப்பினர் கவிஞர்.சிந்ரா அவர்கள்



முன்னாள் சுகந்தம்" சஞ்சிகையின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான ரவிப்பிரியா அவர்கள் (இடது பக்கம்)

 படங்கள்: சபா புத்திரன் (புதுக்குடியிருப்பு)