| அறிவியில் ஆராய்ச்சியில் புதுவித சாதனை நிகழ்த்திய இந்திய வம்சாவழி பெண்ணை ஒபாமா பாராட்டினார். |
| அமெரிக்காவில் படிக்கும் மாணவ- மாணவிகளின் அறிவியல் ஆராய்ச்சியின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அதிபரின் வெள்ளை மாளிகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ஆரேகான் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சா வழியை சேர்ந்த 17 வயது மாணவி மேகனா ராவ் பங்கேற்றார். சார்க்கோல்(மரக்கரி) தொடர்பாக அவர் வெளியிட்ட 'புராஜெக்ட்' அறிக்கையை பார்த்து வியந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மேகனா ராவை வெகுவாக பாராட்டினார். அவரை அருகில் அழைத்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த ஒபாமா, உன்னால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த நல்ல முயற்சியை தொடர்ந்து செய் என்று கூறியுள்ளார். அமெரிக்க இயன்முறை வரலாறு அருங்காட்சியகத்தின் சிறந்த விருதினைப் பெற்றுள்ள மேகனா ராவ், 'போர்ட்லேண்ட் இளம் ஆராய்ச்சியாளர்கள்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இதர மாணவர்களுடன் இணைந்து மரக்கரியின் பயன்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு இளம் இயன்முறையாளர் (யங் நேச்சரலிஸ்ட்) விருதும், பெப்சி நிறுவனத்தின் 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் உதவிப்பணமும், மற்றொரு நிறுவனத்திடமிருந்து 11 ஆயிரத்து 500 டொலர்கள் உதவிப்பணமும் கிடைத்துள்ளது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது நன்றி: தமிழ்வின் |