புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக்கழகம் சித்திரை புத்தாண்டை சிறப்பித்து பல விளையாட்டுக்களை நடத்திக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில் கடந்த வார இறுதியில் கரப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றன. இந்த வார இறுதியில் கரப்பந்து, கபடி மற்றும் உதைபந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. சித்திரை விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் எதிர்வரும் 19.04.2014 சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது