மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - 2015

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (19.02.2015) வித்தியாலய மைதானத்தில் வித்தியாலய அதிபர் திரு.வே.தட்சணாமூர்த்தி அவர்களின் தலைமையில் சிவசிறி.கோ.கிரிதர குருக்கள்  அவர்களின் ஆசியுரையுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ.பாராளுமன்ற உறுப்பினர். திரு.பா.அரியநேந்திரன் கலந்துசிரப்பித்தார். சிறப்பு அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் திரு.கோ.கருணாகரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.வா.லாவகுமார், மற்றும் ஓய்வுபெற்ற மண்முனைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.வே. கந்தசாமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.