மட்டக்களப்பு புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிராமத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு சங்கத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரவி , புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி கோ.கிரிதரக் குருக்கள் ஆலய தலைவர் அ.குலேந்திரராசா புதுவை அமைப்பின் தலைவர் மா.சதாசிவம் மண்முனை மேற்கு கோட்டக்கல்விப்பணிப்பளர். த. சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.