முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் மற்றும் உலக நண்பர்கள் அமைப்பு என்பவற்றின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனைப் பற்று கல்விக் கோட்டத்தில் கடந்த க.பொ.த(சா/த)பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பரிசு வழங்கிக் கௌரவித்ததுடன் தமிழர் பண்பாடு வாழ்கிறது தமிழர் பண்பாடு வீழ்கிறது என்ற தலைப்பில் கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றமும் இடம்பெற்றது.
இதே வேளை புதுக்குடியிருப்பில் இருந்து சட்டக்கல்லூரிக்கு தெரிவாகி சட்டக்கல்லூரிக்கு செல்லும் மாணவன் லோகராசா யசு என்பவருக்கு கல்வி நடவடிக்கை நிறைவு பெறும்வரை மாதாந்தம் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள உதவித்தொகையினை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இதன் போது பட்டிமன்றத்தில் பங்குகொண்டவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நன்றி : சசி







