மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கென ஒரு தடம் பதித்துள்ள திரு. தங்கராசா இன்பராசா அவர்களுக்கு கலை இலக்கியத்தில்“ நாடகத்துறையில் ஆற்றிக்கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, பங்களிப்புக்களைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாணக் கல்வி , தகவல் தொழிநுட்பக்கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவில் இளங்கலைஞர் விருது வழங்கப் பெற்றது. அவரைப் பாராட்டுவதில் புதுக்குடியிருப்பு இன்போ மற்றும் புதுக்குடியிருப்பு.ORG இணையத்தளங்கள் பேருவகையடைகின்றன.1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 13 ஆம் திகதி பிறந்த தங்கராசா இன்பராசா மட்டக்களப்புப் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மட்- புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் பாடசாலைகட காலத்தில் நடைபெற்ற பேச்சு, கவிதை, சிறுகதை, நாடகம், விவாதம் ஆகிய இலக்கியத் துறைகளில் கொட்ட மட்டம் முதல் மாகாண மட்டம் வரை வெற்றிபெற்றுப் பல சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவர் முதன் முறையாக 1991 இல் தனது ஆறாவது வயதில் ் கட்டியக் காரன்” பாத்திரமேற்றும் 1992 இல் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட கலாசார இலக்கிய விழாவில் முதலாம் இடம்பெற்ற “சராசந்தன் சமர்” எனும் கரகாட்டத்தில் சராசந்தன் எனும் பிரதான பாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார்.
1992 முதல் 2004 வரை உருத்திரசேனன் சண்டை, மயில் இராவணன் சண்டை, ஆரவல்லி சமர், சராசந்தன் சமர், சத்தியவான் வாவித்திரி, கண்ணகி சிலம்பு போன்ற கரகங்களில் ஆடியும் இராவண தரிசணம், அம்பிகாவதி அமராவதி, பாஞ்சாலி சபதம், திருவிளையாடல், மதுரவாசன், பொல்லாத பணம் பிரம்படி பெற்ற பெருமாள், முதலிய நாடகங்களில் நடித்தும் அரிச்சந்திர மயாணகாண்டம், இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் , ஆசானைப்போற்றுவேம், மரணம் இல்லாத மனைகள் ஆகிய நாடகங்களைப் போட்டிக்காக தயாரித்து நடித்து வெற்றியும் பெற்றுள்ளர்.
வாழக்கல் வாசிப்போம் , கல்வியா செல்வமா வீரமா? அன்னை சிறார்களே தேசத்தின் சொத்து முதலிய வில்லுப் பாடல்களை தயாரித்தும் பாடியும் தமது கலைப் பயணத்தினைத் தெடர்ந்து செய்கொண்டிருக்றார்.
2008 ஆம் ஆண்டு தேசிய இளைஞர்சேவை மன்றத்தினர் நடத்திய தேசிய நாடகவிழா போட்டியில் வெற்றி பெற்ற் நாடகமான அருகே ஒரு பாலைவனம் இவரது நெறியாள்கைளில் உருவாகியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
வேரடிமண், விரட்டியடி, மனிதம், அடையாளம், ஆகிய குறும்படங்களில் தனது நடிப்புத் திறனையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் 2005 முதல் கதிரவன் கலைக்கழகத் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளராகவும் கண்ணகி கலை இலக்கியக் கூடலினால் வெளியிடப்பெறும் “கூடல்” மலர் தொகுப்பாசிரியராகவும் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவையின் செயற்குழு அங்கத்தவராகவும் மட்டக்களப்பு செங்கதிர் இலக்கிய வட்டத்தின் இணைச் செயலாளராகவும் தற்போதும் செயற்பட்டு வருகின்றார்.
