சர்வதேச வாசிப்பு மாதம் -ஒக்டோபர் சிறப்பு நிகழ்வு இன்று 27/10/2016 மட்/புதுக்குடியிருப்பு பொது நூலக வாசகர் வட்டத்தின் ஒழுங்குபடுத்தலில் பொது நூலகத்தில் சின்னத்தம்பி சுதேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் மண்முனைப்பிரதேச சபையின் செயலாளர் திரு ந. கிருஷ்ணபிள்ளை அவர்கள் முதன்மை அதிதியாக பங்குபற்றியமை சிறப்பம்சமாகும் சிறப்பு அதிதிகளாக சனசமூக நிலைய உத்தியோகத்தர் மற்றும் ஊர் பிரமுகர்கள் நூலகர்கள் என பலர் பங்குற்றினர் இங்கு வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் ஆற்றுகைகள் இடம்பெற்றதுடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது நிகழ்வின் பிரதான அம்சமாக புதுக்குடியிருப்பு பொது நூலகத்தின் ஆரம்ப கர்த்தா திரு மா.ச தாசிவம் (ச.நீ)மற்றும் நூலக ஆரம்ப காலம் முதல் இராமகிருஷ்ணவிஜயம் இதழினை வழங்கிவரும் திரு பொ.சின்னத்தம்பி(ச.நீ) ஆகியோர் கௌரவம் பெற்றனர் அத்துடன் வாசகர்களால் தயாரிக்கப்பட்ட கையெழுத்து சஞ்சிகை வெளியீடும்,நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பும் நிகழ்வின் ஓர் அங்கமாக நடைபெற்றது.
(கதிரவன். த. இன்பராசா)