மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று(08-06 -2017) மு.ப 1.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சிறியரக டிப்பர்( வடி)வாகனம் ஒன்றும் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கன்டர் ராக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
வாகரைப் பகுதியில் இருந்து வீரப்பழம், பாலப்பலம் ஏற்றிக்கொண்டு சிறியரக வாகனத்தில் பயணித்த கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜப்பார் (43வயது), அவருடன் உதவிக்கு பயணித்த நபரும், பெரியரக (கன்டர்) வாகனத்தில் பயணித்த கொழும்பு அங்கோடையைச் சேர்ந்த அல்பட் (65வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
-செ.துஜியந்தன்-




