புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களால் இந்து சமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்


 செ.துஜியந்தன்
புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு ஊர்வலமும், அறநெறிக் கல்வி கொடி தினமும் 2017- 06-18 ஞாயிற்றுக்கிழமை அறநெறி அதிபர் தி.நாகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மண்முனைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் திருமதி லக்சன்யா பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் இந்து கலாசார உத்தியோகஸ்தர்களான திருமதி ப. கயல்விழி, எஸ் சசிகலா ஆகியோரும், கிராம சேவகர்களான கே.கேதாரபிள்ளை, டிலக்சன், திருமதி கி.தயனி ஆகியோரும் ஆன்மீக அதிதியாக விக்கினேஸ்வரர் ஆலய பிரதம குரு கோ.கிரிதரக்குருக்கள், மற்றும் புதுவை அமைப்பின் தலைவர் மா.சதாசிவம், ஆலயதலைவர் அ.குலேந்திரராஜா, கண்ணகி மகா வித்தியாலய அதிபர் வெ.தட்சிணாமூர்த்தி, அகரம் செ.துஜியந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதி ஊடாக சென்று புதுக்குடியிருப்பு தபால் நிலையம் வரை சென்று அங்கிருந்து கண்ணாமுனைப் பிள்ளையார் ஆலயம் சென்றடைந்து ஆலய முன்றலில் இந்து சமய விழிப்புணர்வு பிரச்சாரம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.