தேசியரீதியில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவன் சாதனை

23.10.2022 அன்று பொலனறுவையில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தை (தேசிய பாடசாலை) சேர்ந்த மாணவன் யோகேந்திரன் சதிஸ்காந் பழுதூக்கல் போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளார். இவ் வெற்றியானது கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.