புதுக்குடியிருப்பில் இன்று (12.01.2013) சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தின விழா


அம்மன் அறநெறிப் பாடசாலையின் அனுசரனையுடன் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின விழா இன்று காலை 9.00 மணிக்கு அம்மன் அறநெறிப் பாடசாலையின் அதிபர் திரு.மா. சதாசிவம் அவர்களின் தலைமையில் மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகாவித்தியாலய மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டஇந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளரும், சுவாமி விவேகானந்தர் 150 வது ஜனன தின விழாக் குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளருமான திரு.பவளகாந்தன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையும் ஆற்றினார்.
   இந் நிகழ்வில் கண்ணகி மகா வித்தியாலய அதிபர் .திரு.வே.தட்சணாமூர்த்தி அவர்களும் ஆசிரியர் திரு.செ.தேவதாஸ் அவர்களும் உரையாற்றியதுடன் அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர் திரு.தி.நாகநாதன் அவர்கள் மகிழ்வுரையும் ஆற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர்.





















































படங்கள் : ச.லவன்