உலகின் விலையுயர்ந்த ஐபோன் 5


உலகின் விலையுயர்ந்த ஐபோனின் பெறுமதி என்னவென்று உங்களுக்கு தெரியுமா ? ஊகித்தாவது கூற முடியுமா?
எவ்வளவு தான் ஊகித்தாலும் இத்தொகையைநெருங்கிக்கூட இருக்க மாட்டீர்கள் காரணம் அந்தக் தொகைக்கு ஒரு கையடக்கத்தொலைபேசியை கனவில்  கூட நினைத்திருக்க மாட்டோம்.
ஆம், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான ஸ்டுவர்ட் ஹக்ஸினால் வடிவமைக்கப்பட்டுள்ள  ஐபோன் 5 வின் விலை 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இலங்கை நாணயத்தின் படி  கிட்டத்தட்ட 191 கோடியே 86இலட்சம் ரூபாக்களாகும்.

தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இது கறுப்பு மற்றும் வெள்ளை வைரங்கள் பதிக்கப்பட்டது.
ஆடம்பரப் பொருட்களை வடிவமைக்கும் ஹக்ஸ் ஆரம்பத்தில் சீன வர்த்தகர் ஒருவருக்காகவே இதனை வடிவமைத்துள்ளார்.
குறித்த வர்த்தகர் தனது பரம்பரைக்குச் சொந்தமான அரிய 19 கறுப்பு வைரங்களை தனது ஐபோனில் பதிக்க விரும்பியுள்ளார்.
அதனையடுத்தே ஹக்ஸ் இதனை வடிவமைத்துக்கொடுத்துள்ளார். ஐபோனின் வெளிப்புறமாக மொத்தம் 600 வெள்ளை வைரங்கள், அப்பிள் லோகோவில் 53 வெள்ளை வைரங்கள், 135 கிராம் தங்கம் மற்றும் செபயர் கிளாஸ் கொண்ட திரை போன்றவற்றை இவ் ஐபோன் 5 உள்ளடக்கியுள்ளது.

மேலும் ஐபோனின் ஹோம் பட்டம் கறுப்பு வைரத்தைக் கொண்டுள்ளது.
ஸ்டுவர்ட் ஹக்ஸ் சுமார் 9 வார உழைப்பின் பின்னரே அவர் இதனை உருவாக்கியுள்ளார்.
இதற்கு முன்னர் ஹக்ஸ் 9.18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஐபோன் 4எஸ் இனை உருவாக்கியிருந்தார்.