அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவன் செல்வன் யோகேந்திரன் சதீஸ்காந் அவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு அதிபர் அ.கு லேந்திரராசா தலைமையில் வலயக்கல்வி பணிப்பாளரின் பங்குபற்றலோடு 25.10.2022 (செவ்வாய்க் கிழமை ) காலை 7.30 மணிக்கு அருள்மிகு விக்கினேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கண்ணகி மகா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் முன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்
சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார். அத்தடன் கோட்டக்கல்விப்
பணிப்பாளர், கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆலயபரிபாலன சபையினர், விளையாட்டுக்கழகங்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் வெற்றியானது கிழக்கு மகாணத்தில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் பளுதூக்கலில் வென்று சாதனைபடைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
.






















