கடற்கரை வீதியைச் சேர்ந்த கனகசூரியம் புவனேஸ்வரி என்பவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீர் தீவிபத்து

- செ.துஜியந்தன்-

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த கனகசூரியம் புவனேஸ்வரி என்பவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் ஆலயம் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவரது சுவாமியறையில் இருந்து புகை வெளிப்பட்டதையடுத்து அயலவர்களின் உதவி கொண்டு தீயினை அணைத்துள்ளனர். இப்பாதிப்பினால் 30 000 ரூபா பணமும் ரூபா.60 000 இற்கும் மேற்பட்ட வீட்டு உபகரணங்களும்; சேதமடைந்துள்ளதாக புவனேஸ்வரி தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீஸ் இலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத் தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.