சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு விவேகானந்தாக் கல்லூரியினால் மிக விமர்சையாக கொண்டாடப் பெற்றன

ஏழை மக்களுக்காக இதயம் உருகிய உத்தமர்  சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லூரியில் தொழிற்பயிற்சியினைப் பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் 09.02.2017 அன்று புதுக்குடியிருப்பு விவேகானந்தாக் கல்லூரியினால் மிக விமர்சையாக நடைபெற்றன.

காலை 9 மணியளவில் சமூக நலன்புரி அமைப்பின் உபதலைவர் திரு.வே.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் கிரான்குளம் சீமூண் கார்டன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மிக விருந்தினராக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்த ஜீ அவர்கள் கலந்து சிறப்பித்தார். 

நிகழ்வில் ஆத்மீக சொற்பொழிவுகளும் வயோதிபர்களுக்கான உடைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றதோடு பல கலை நிகழ்வுகளும் நடந்தேறின
























படங்கள் - திருவாளர்.  சற்குணேஸ்வரன் ( Swami Vivekananda ViberGroup)